8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம்… அவர் இல்லாமல் அயர்லாந்து டூர் வாஸ்துவமா…
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைமை பயிற்சியாளர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்பொழுது இந்திய தலைமை பயிற்சியாளராக இராகுல் டிராவிட் அவர்கள் செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அயர்லாந்து செல்லும் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்கள் செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களுக்கு பதிலாக விவிஎஷ்.லக்சுமணன் அவர்களும் மற்ற பயிற்சியாளர்களும் இந்திய அணியுடன் செல்லவுள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. குறைந்த போட்டிகள் மட்டுமே இருப்பதால் தலைமை பயிற்சியாளர் இராகுல் டிராவிட் அவர்கள் இந்திய அணியுடன் செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.
கடந்த 2015ம் ஆண்டு அப்போது தலைமை பயிற்சியாளராக இருந்த பிளெட்சர் தலைமை பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார். அப்போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் போட்டிகளில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.