இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 வது போட்டியில் தற்போது படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 5 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த 4 வது போட்டியின் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த 4 வது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விளையாடி கொண்டிருந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடலாம் ஆன அதுக்குன்னு இப்படியா என்ற வகையில் உடலுறவு கை சைகை செய்து அசிங்கபடுதியுள்ளார் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்.
இதற்கு இந்திய ரசிகர்கள் மற்றும் பல வீரர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு குழந்தைகள் பெண்கள் வயதானோர் பார்க்கும் இந்த போட்டியில் அவர் இவ்வாறு செய்தது ஒரு கேவலமான ஒன்று கண்டிக்க தக்க ஒன்று அதனால் ஐசிசி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அவர் இது போன்று செய்வது வழக்கம் இது நகைச்சுவையான ஒன்றுதான் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் ச்சீ வெக்கமா இல்லையா?? இவ்வாறு செய்த பின்னும் அவருக்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசுவது என்று கூறி வருகின்றனர்.