Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு போடப்படும்! முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

அன்மையில் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி அடைந்தது இதை இந்தியாவில் ஒரு சிலர் கொண்டாடி இருக்கின்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரையில் நான்கு பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய 7 பேர் மீது தேசத்துரோக சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருக்கக்கூடிய மாணவிகள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி அதோடு அந்த நாட்டிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை பாகிஸ்தான் அணியின் வெற்றியை தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்து அதில் நாம் வெற்றி பெற்றோம் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள், பள்ளி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version