Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! 

#image_title

ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!!
உயர் மின் அழுத்தம் கொண்ட ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மும்பைக்கு சி.எஸ்.எம்.டி எக்ஸ்பிரஸ்(16352) ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.40 மணியளவில் அரியலூர் சென்றது.
பின்னர் அரியலூரில் இருந்து புறப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் பழைய பாம்பன் ஓடை என்ற காட்டுப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழித்தடத்தில் உள்ள மின் கம்பியில் பச்சை நிற. சேலை ஒன்று. கல்லை கட்டியவாறு தேங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த இஞ்சின் டிரைவர் சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தினார்.
அதன் பின்னர் ரயில் இஞ்சின் டிரைவர், ரயில் உதவியாளர்கள், பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வந்து சேலை தேங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகே சென்று பார்த்தனர். சற்று தூரத்தில் ஒருவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இதையடுத்து ரயில்வே மின்கம்பியில் சேலை தேங்கிக் கொண்டிருந்தது தொடர்பாக உடனடியாக  விருதாச்சலம் ரயில்வே காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை காவல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது இந்த சேலை காற்றுக்கு தான் கல்லை கட்டிக் கொண்டு பறந்து வந்து மின்கம்பியில் விழுந்திருக்காது என்றும் ரயில் இன்ஜின் மேல் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் ஊரும் போது ரயில் எளிதாக தீ பிடிக்கும் என்ற குறிக்கோளுடன் சமூக விரோதிகள் செய்த செயல் என்று சந்தேகம் அடைந்தனர்.
இதற்கு மத்தியில் சேலை இருக்கும் ரயில் மின் கம்பியில் இருந்து தீப்பொறி விழுவதை பார்த்த பயணிகளும் ரயில்வே அதிகாரிகளும் அச்சம் அடைந்தனர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மின் கம்பியில் இருந்த சேலையை அகற்றினார்.
இந்தசம்பவத்தால் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் சென்றது. இந்த திட்டத்தை தீட்டி ரயிலை தீப்பிடிக்க செய்த மர்ம நபர்களை ரயில்வே காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர். ரயில் இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டு உள்ளது. ரயில்வே மின் கம்பியில் சேலை தொங்கியது பயணிகள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Exit mobile version