சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!
நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்4) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 200 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 100 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்பொழுது களமிறங்கிய சஷாங்க் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை விளையாடிய சஷாங்க் சிங் சிக்ஸர்களும் பவுண்டரிகளையும் விளாசினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சஷாங்க் சிங் பற்றி முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது ஐபிஎல் ஏலம் நடந்து கொண்டிருக்கும் வேலையில் 19 வயதில் ஒரு சஷாங்க் சிங் வீரரும் 32 வயதில் ஒரு சஷாங்க் சிங் வீரரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 வயதுள்ள சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக 32 வயதான சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில் “ஐபிஎல் ஏலத்தில் இவரை தவறுதலாக எடுத்தோம். முதலில் இவரை ஏற்க மறுத்தோம். ஆனால் இவருடைய திறமையின் மீது நம்பிக்கை இருக்கின்றது” என்று பதிவிட்டிருந்தது. இதையடுத்து சஷாங்க் சிங் “என்னுடைய திறைமையின் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.