இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது நான்காவது போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டி சமனிலும் முடிவடைந்தது.,
இந்நிலையில் முக்கிய போட்டியாக தொடங்கிய 4 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி படு தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்விக்கு பின் முக்கிய வீரர்களாக விராட் மற்றும் ரோஹித்,ராகுல்,ஃபண்ட் ஆகிய முக்கிய வீரர்கள் மீதான விமர்சனம் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் செய்த செயல் இந்திய ரசிகர்களை அவமானபடுதியுள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வந்த நிலையில் அவரின் விக்கெட்டுக்கு கொண்டாடும் விதமாக அவர் செய்த செய்கை அருவெருக்க தக்க செய்கையாக இருந்துள்ளது. இதனை கண்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் என அனைவரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய ரசிகர்கள் ஐ பி எல் இல் விளையாட இந்திய வந்துராத வந்த நீ அவ்ளோதான் என்றும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.