விராட் கோலி, ஏபி டி வில்லியர்சும் ஆர்சிபி அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். இரண்டு பேரும் உடனடியாக ஆட்டம் இழந்தால், அந்த அணி திணறிவிடும். அதனால் இருவரையும் சார்ந்தே அணி இருக்கிறது எனச் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அவர்கள் எங்களுக்கு ஏராளமான ஆட்டங்களையும் வென்று கொடுத்துள்ளனர். எங்கள் அணியில் 11 வீரர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் மட்டுமே நம்பியிருந்தால், அதன்பிறகு மற்றவர்கள் ஏன் விளையாட வேண்டும். ஒவ்வொரு நபரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். மற்றவர்களை விட இரண்டு பேரும் சற்று அதிகமான பங்களிப்பை கொடுக்கின்றனர். அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருப்பது அணிக்கு சிறந்ததாக உள்ளது’’ என்றார்.
பெங்களுரு அணியை பற்றி அதிரடி கருத்து கூறிய உமேஷ் யாதவ்
