19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர்!!! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!!! 

0
108
#image_title

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர்!!! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!!!

19 வயதுக்கு உட்பட்டவர்கள் விளையாடும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி என்று அழைக்கப்படும் சர்வததேச கிரிக்கெட் கவுன்சில் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், இந்தியா யு19, இங்கிலாந்து யு19, பாகிஸ்தான் யு19, ஆஸ்திரேலியா யு19, நியூசிலாந்து யு19, தென்னாப்பிரிக்கா யு19 ஆகிய அணிகள் உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றது.

இந்த 16 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்தியா யு19 அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், அயர்லாந்து, யு.எஸ்.ஏ ஆகிய அணிகள் பங்கேற்று உள்ளது.

அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை யு19 உலகக் கோப்பை தொடர்பு நடைபெறவுள்ளது. இந்தியா யு19 அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் யு19 அணியுடன் ஜனவரி 14ம் தேதியில் விளையாடவுள்ளது.

யூ19 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி பிப்ரவரி 4ம் தேதியிலும் நடைபெறவுள்ளது குரூப் பிரிவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் தங்களது குரூப்பில் இடம்பெற்றுள்ள அணியுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் ஸ்டேஜ்க்கு முன்னேறும்.

சூப்பர் 6 சுற்றுகளில் பங்கேற்கும் ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கபப்படும். அதாவது குரூப் ஏ மற்றும் குரூப் டி-யில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் 6 அணிகள் ஒரு குழுவாகவும் குரூப் சி மற்றும் குரூப் பி-யில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் ஆறு அணிகள் மற்றொரு குழுவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இந்த இரண்டு குரூப்புகளிலும் ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் இடம்பெற்றுள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில் இரண்டு குரூப்புகளில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தகவல் வெளியாகி இ

ருக்கின்றது.