Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பிளே-ஆஃப் போட்டிகள்

பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பிளே-ஆஃப்ஸ் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் 1 ஆகியவை நவம்பர் 14-ந்தேதியும், எலிமினேட்டர் 2 நவம்பர் 15-ந்தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 17-ந்தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Exit mobile version