இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் ரிஷப் பண்ட். இந்த சூழ்நிலையில், மாநில தூதுவராக ரிஷப நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்னரே இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வந்தனா பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தூதுவராக உத்தரகாண்ட் அரசு நியமனம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தில் பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டு கௌரவப்படுத்தபட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த விதத்தில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் இது போன்ற பதவிகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த உத்தரவு குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கரணி வெளியிடுகின்ற தன்னுடைய வலைப்பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் இளைஞர்களுக்கு இடையே விளையாட்டையும், ஆரோக்கியத்தையும், ஊக்குவிப்பதாக தெரிவித்தார். அதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் குறிப்பிடுகிறார்.