Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரருக்கு இடமா?

சென்ற 2007ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரையில் 6 டி20 உலக கோப்பை தொடர் நடந்து இருக்கிறது. இதில் 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பையில் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி.இதற்கிடையில் சென்ற வருடம் நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நோய்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது ஒட்டு மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

டி-20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய அணிகளில் விளையாடக்கூடிய வீரர்களை அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதோடு வருண் சக்கரவர்த்திக்கு உலக கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும்? என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகப் பெரிதாக எழுந்து நின்றது.சமீபத்தில் இதுதொடர்பாக பேட்டி கொடுத்த வருண் சக்கரவர்த்தி தன் கவனம் முழுவதும் ஐபிஎல் தொடர் மீது மட்டுமே இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். கல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து கல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது.

தற்போது தன்னுடைய முழு கவனமும் கல்கத்தா எப்படியாவது அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறது உலகக் கோப்பை டி20 தொடரில் இடம் பெறுவதற்காக இனிவரும் போட்டிகளில் நான் விளையாட போவதில்லை தற்சமயம் எனக்கு முழு கவனமும் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்று தெரிவித்திருக்கிறார். சுழற்பந்து வீச்சை பொருத்தவரையில் இந்திய அணிக்கு எந்த வீரர் தேவை என்பது அணி நிர்வாகத்திற்கு தெரியும் ஆகவே தேர்வு தொடர்பாக தற்சமயம் நான் யோசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version