ரஜினியின் அறிவுரையை வேதவாக்காக எடுத்து கொண்ட விஜய் சேதுபதி!! இனி வில்லனாக திரைப்பயணம்!!
நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும்.
ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். மேலும் இவர் தற்பொழுது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகின்றார்.
அந்த வகையில் அவர் தன் ரசிகர்களிடம் மிகவும் அன்பாகவும் ,கனிவாகவும் நடந்து கொள்ளவார்.அதற்கு உதாரணமாக சமூகவலைத்தளத்தில் வெளியான பல வீடியோக்களை பார்க்கலாம்.
இவ்வாறு நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வருகின்ற விஜய் சேதுபதி தற்பொழுது வில்லன் ரோலில் கலக்கி கொண்டு வருகின்றார்.
இப்படி அவர் தொடர்ந்து வில்லனாக கலக்கி கொண்டு வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் தான் காரணம். பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைத்து விஜய் சேதுபதி நடித்து வந்தார். அப்பொழுது சேதுபதிக்கு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிலையில் இருவரும் நன்றாக பேசி கொடிருந்த பொழுதுரஜினிகாந்த் அவர்கள் விஜய் சேதுபதியிடம் ஒரு நடிகனாக உனக்கு எந்த கிடைத்தாலும் நடிக்க வேண்டும் ,சம்பாதிகின்ற நேரத்தில் சம்பாதிக்கணும் எதையும் விடாதே என்று சொன்னாராம் .
அவர் கூறியதை பின்பற்றிய விஜய் சேதுபதி அதன் பிறகு தனக்கு எந்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிக்க தொடங்கினார்.நல்ல கதையாக இருந்தால் மட்டும் போதும் தனக்கு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என்றார்.