சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!!
திருப்பத்தூர் மாநகரில் சாலை விதிகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் ஆட்களை ஏற்றிய ஆட்டோக்களை எச்சரித்தனர் காவல் துறை அதிகாரிகள்.
திருப்பத்தூர் பகுதியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் , ஆட்டோக்கள் அதி அளவில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் புகார்கள் வந்து கொண்டே உள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அதில் பெரும்பாலன பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றுவது இல்லை என்று தெரிவித்தனர்.
இதன் பின்பு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து துறை காளியப்பன் தலைமையில் மோட்டார் வாகன் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அவரது குழுவினர் இணைந்து நேற்று சோதனை நடத்தினர்.
சோதனையின் போது சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட 4 வாகனங்கள் மற்றும் அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் என்று மொத்தம் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலை விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டால் வாகனங்கள் கைபற்ற படுவதோடு சமந்தபட்டவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.