Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“அந்த தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன்….” பிசிசிஐ-க்கு கோஹ்லி தகவல்!

“அந்த தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன்….” பிசிசிஐ-க்கு கோஹ்லி தகவல்!

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த சில ஆண்டுகளாக தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார்.

விராட் கோஹ்லிம், தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அதையடுத்து அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேட்டிங் போதாமை காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதன் காரணமாக அவர் ஃபார்மை மீட்டெடுக்க சில தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்குமார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அதிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இப்போது கோஹ்லி பிசிசிஐ யிடம் ‘தான் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாட தயாராக உள்ளதாக” தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியக் கோப்பை தொடர் இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளது.

Exit mobile version