Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக வீரர்கள் அனைவரும் நேற்று துபாய் சென்றனர். வீரர்கள் அனைவரும் புறப்படும் போது தங்களது புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனி விமானம் மூலம் துபாய் புறப்படடது. விமானத்தில்  வீரர்கள் உள்ளது போன்ற படத்தில் விராட் கோலி இல்லை.
இதனால் ரசிகர்கள் விராட் கோலி எங்கே என்று கேள்விகள் எழுப்பினார். இந்நிலையில் ஒரு வீட்டின் மாடியில் நின்றபடி எடுத்த படத்தை விராட் கோலி பதிவிட்டு ஹாய் துபாய் என டுவீட் செய்திருந்தார். இந்த படத்தை வெளியிட்ட ஆர்சிபி, விராட் கோலியை எங்கே என கேட்பவர்கள், அங்கே செல்லலாம். கேப்டன் கோலி வீட்டில் உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
Exit mobile version