ஐசிசி வெளியிட்ட புதிய அட்டவணை! சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய கோலி!

0
118

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணை வெளியாகி இருக்கின்ற சூழலில் அது தொடர்பாக விராட் கோலி ஒரு முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் காதல் தோல்வியை தழுவியது இந்திய அணி என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த சீசனுக்கான அறிவிப்புகளை ஐசிசி அடுத்தடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த கட்டத்தில் இன்று இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் 3 தொடர்களை உள்நாட்டிலும் 3 தொடர்களை வெளிநாட்டிலும் விளையாட வேண்டும். அதன்படி இந்திய அணி உள்நாட்டில் இலங்கை, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட அணிகள் உடன் மோத இருக்கிறது. அதே போல அயல்நாட்டு தொடர்களுக்கான வரிசையில் வங்கதேசம் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் விளையாட இருக்கிறது. இந்திய அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பிக்க இருக்கின்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு அது முதல் தொடர் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கான அட்டவணை தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விபரிக்கின்றார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மிகச்சிறப்பாக அமைந்தது மறக்க இயலாத போட்டி என்று குறிப்பிட்டிருக்கிறார். இறுதிப்போட்டி மட்டுமல்லாமல் அந்த தொடர் முழுவதும் வீரர்களின் ஆர்ப்பரிப்பு கண்ணால் காண இயன்றது என்று குறிப்பிட்டிருக்கிறார் விராட் கோலி. ரசிகர்கள் இரண்டாவது சீசனுக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி ஒரு புதிய புத்துணர்ச்சியுடன் களமிறங்கியிருக்கிறது. எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் அணி முழுவதும் மிகச் சிறப்பாக செயலாற்றி வெற்றியை ருசிப்போம் அது ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். புத்துணர்ச்சியான அணி என்று தெரிவித்திருப்பது பார்த்தோமானால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடாத மூத்த வீரர் புஜாரா அணியிலிருந்து விலக்க படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த போட்டியின் இரண்டாவது சீசனில் இங்கிலாந்திற்கு இது முதல் டெஸ்ட் தொடர் ஆகும் இது தொடர்பாக உரையாற்றிய அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்திய அணி எல்லாத் துறைகளிலுமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். அவர்களை எங்களுடைய சொந்த மண்ணில் எதிர் கொள்வது நல்லதுதான் சென்றமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவற விட்டோம் இந்த முறை அவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.