CRICKET: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்யாமல் இருந்ததே தோல்விக்கு காரணம்.
இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடி தோல்வியடைந்த பிறகு வலை பயிற்சியோ அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்யாமல் ரோஹித் சர்மா அபுதாபிக்கும் விராட் கோலி லண்டனுக்கும் சென்றது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 0-3 என்ற விகிதத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி சாதனையை நியூசிலாந்து அணி முடியடித்து.
இந்த தோல்விக்கு காரணம் முக்கிய மூத்த வீரர்கள் அணிக்கு ரன்கள் சேர்க்காதது தான். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சேர்ந்து 100 ரன்கள் கூட எடுக்கவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறியது அப்பட்டமானது.
அந்த தொடரில் விராட் கோலி இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தம் 99 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் அதிகபட்ச ஸ்கோர் 42 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இவரை விட மோசம் இவர் இரண்டு போட்டிகளில் மொத்தம் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த போட்டியில் தொவியடைன்தனர் இதன் பின் 2 வாரம் ஓய்வு கிடைத்தது. ஆனால் இந்த ஓய்வை பயன்படுத்தி இவர்கள் சுழற்பந்தினை எதிர்கொள்வது எப்படி என்று பயிற்சி செய்திருக்கலாம் ஆனால் விராட் கோலி விட்டால் போதும் என்று லண்டனுக்கும், ரோஹித் சர்மா அபுதாபிக்கும் சென்று விட்டனர். இதுவே நியூசிலாந்து அணி தோல்விக்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.