இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மேலும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. மேலும் தற்போது இரண்டாவது போட்டியானது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி முதல் போட்டியில் சதம் விளாசினார். அதை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 ரன்களில் அவுட் ஆனார்.
அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் முதல் இன்னிங்ஸில் எப்படி ஆட்டமிழந்தரோ அதே பந்து அதே ஸ்டம்ப் லைன் என விமர்சித்து வருகின்றனர்.