CRICKET: கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யத ஒரு இமாலய சாதனையை செய்துள்ளார் விராட் கோலி.
இந்திய-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி இந்த தொடரில் தன்னுடைய சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாதா நிலையில் அதனை தொடர்கிறார். இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் விராட் கோலி 4 ரன்களில் அவுட் ஆனார்.
போட்டியில் அவுட் ஆனாலும் அவர் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். இதுவரை 7 வீரர்கள் மட்டுமே 600 இன்னிங்ஸில் விளையாடி உள்ளனர்.அவர்களை தொடர்ந்து இந்த போட்டியின் மூலம் எட்டாவதாக 600 இன்னிங்ஸ் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 200 வது டெஸ்ட் இன்னிங்ஸ் என்ற சாதனையும் படைத்துள்ளார்.இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், குமார் சங்ககரா, ராகுல் ட்ராவிட், ஜெயவர்த்தனே, ஜெயசூர்யா யாரும் 27,000 ரன்கள் அடித்ததில்லை.
ஆனால் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத இந்த சாதனையை விராட் கோலி செய்துள்ளார். இவர் 600 இன்னிங்ஸில் 27,133 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இவர் 200 டெஸ்ட் இன்னிங்ஸ், 283 ஒரு நாள் இன்னிங்ஸ் மற்றும் 117 டி 20 இன்னிங்ஸில் விளையாடி இருக்கிறார்.