இந்திய அணி தற்போது சமீபத்தில் தான் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடர் சுற்றுபயணத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி உள்ளது. இந்த தொடரில் பரிதாபமாக இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வென்றிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் வென்றது. கடந்த இரண்டு முறை இறுதி போட்டிக்கு சென்றது ஆனால் இந்த முறை வெளியேறியுள்ளது. இதன் பின் கம்பீர் மற்றும் ரோஹித், விராட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இவர்கள் மூவரையும் பேசாத மீடியா இல்லை முன்னாள் வீரர்கள் இல்லை, ரசிகர்கள் இல்லை. கவாஸ்கர் இருவரும் கண்ணாடியை பார்த்து உண்டா நாம் கண்ணாடி பார்க்கும் போது முன்னாடி உள்ள புகைப்படத்தை பார்த்து ஒப்பிட்டு பார்ப்போம் அப்போது நமது முகத்தில் உள்ள மாற்றத்தை சரி செய்வோம் அதுபோல நாம் நமது முன்னாள் போட்டிகளை கண்டு துவண்டு விடாமல் நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.