இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆனால் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றது.
மற்ற இரு போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை அதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் மூத்த முக்கிய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தான் இருவரும் எந்த பெரிய ரன்களையும் எடுக்காமல் இருக்கின்றனர். விராட் கோலி முதல் போட்டியில் சதம் விளாசினார். அத்துடன் அவர் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தொடங்கி விட்டார்.
நேற்று முன் தினம் தொடங்கிய 4 வது போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் ரன் ஏதும் சேர்க்காமல் அவர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இதனால் அணியின் நிலை மோசமானதாக மாறி வருகிறது. இதனால் இருவர் மீதும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இவர்களை நீக்கிவிட்டு சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.