விராட்கோலி சாதனை

0
139

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு நாள் போட்டியின் தரவரிசை பட்டியலை  ஐ.சி.சி வெளியிட்டது. இதில் 871 புள்ளிகளுடன்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய கேப்டன் விராட்கோலி ரோகித் சர்மா, பாபர் அசாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தையும், பேர்ஸ்டோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.