விராட் கோலி விளையாடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றோம்! ஷாகித் அப்ரிடி பேச்சு! 

0
237
We are excited to see Virat Kohli play! Shahid Afridi speech!
விராட் கோலி விளையாடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றோம்!! ஷாகித் அப்ரிடி பேச்சு!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள மைதானங்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி அவர்கள் விளையாடுவதை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி அவர்கள் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு சேம்பியன்ஸ் பட்டம் வென்றது. இதையடுத்து ஐசிசி நிர்வாகம் அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தவுள்ளது. இந்த தொடர் 2025ம் ஆண்டு பாகிஸ்தான் தொடரில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்திய அணி 12 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளதால் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா என்பது தற்பொழுது வரை கேள்விக் குறியாக இருக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி அவர்கள் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்றும் விராட் கோலி அவர்கள் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது தெடர்பாக ஷாகித் அப்ரிடி அவர்கள் “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாட இந்திய அணியை நாங்கள் எங்கள் நாட்டுக்கு நான் வரவேற்கின்றேன். 2005ம் ஆண்டு நாங்கள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவிற்கு சென்றோம். அங்கு எங்களுக்கு அவ்வளவு மரியாதை கிடைத்தது.
என்னை கேட்டால் விளையாட்டு என்பது வேறு. அரசியல் என்பது வேறு. விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக இணைத்து பார்க்கக் கூடாது. இந்தியா அணி பாகிஸ்தான் நாட்டுக்கு வருவதும் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்வதையும் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்திய அணியின் சிறந்த முன்னாள் கேப்டனாக விளங்கிய விராட் கோலி அவர்கள் ஒரே ஒரு முறை பாகிஸ்தான் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும். அவர் ஒரே ஒரு முறை பாகிஸ்தான் நாட்டுக்கு வந்தால் விராட் கோலி அவர்கள் இந்தியாவில் கிடைக்கும் அன்பை சுத்தமாக மறந்துவிடுவார். பாகிஸ்தான் நாட்டில் இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி அவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான மாஸ் இருக்கின்றது.
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விராட் கோலி அவர்கள் மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலி அவர்களை கொண்டாடுகின்றனர். பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களை போலவே நானும் விராட் கோலி அவர்களுக்கு நல்ல ரசிகன். அவரை எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி அவர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். என்னை கேட்டால் அவர் ஓய்வை அறிவித்திருக்க கூடாது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள மைதானங்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி அவர்கள் விளையாடுவதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.