Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாங்கள் ஒன்றும் ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை – விராட் கோலி

ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி பேசும்போது பல மாதங்களுக்கு பிறகு களம் காண இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டி சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் மதித்து செயல்பட வேண்டும். நாம் இங்கு ஜாலிக்காகவோ, ஊர் சுற்றிப் பார்க்கவோ வரவில்லை என்பதை உணர்ந்து எல்லோரும் நடக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது நிலவும் கடினமான சூழ்நிலையையும், நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் சலுகைகளையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தேவையில்லாத செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார்.

Exit mobile version