Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊருக்கு மட்டும் தான் திராவிட மாடல் எங்களுக்கெல்லாம் இல்லை!! போட்டோவுடன் சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்!! 

ஊருக்கு மட்டும் தான் திராவிட மாடல் எங்களுக்கெல்லாம் இல்லை!! போட்டோவுடன் சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்!!

திமுக அமைச்சர்கள் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஆட்சியைப் பிடித்தது முதல் தங்களது தலைவரையே தூங்க கூட விடாமல் பல சிக்கலில் மாட்டிவிட்டு விடுகின்றனர். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் அவர்களே தங்களது உறுப்பினர்களிடம்,பேசும் வார்த்தையில் கவனம் தேவை என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்தும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பெண்களை இழிவாக பேசுவது என தொடங்கி பல பரபரப்பு செய்தி வழங்குவதில் முன்னோடியாக அமைந்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக மாணவர்களுக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதில் இனி ரீசார்ஜ் செய்ய தங்களது அப்பா அம்மாவிடம் கேட்க தேவை இல்லை. நீங்களே ரீசார்ஜ் செய்து உங்களது பாய் பிரண்டிடம் பேசலாம் என்றவாறு பேசியது பூதாகரமாக வெடித்தது.

அந்த வரிசையில் தான் தற்பொழுது அமைச்சர் எம் ஆர் பன்னீர்செல்வம் சிக்கி உள்ளார்.உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படம் திரைக்கு வந்து அனைவரும் சமம் என்ற கருத்தை தெரிவித்து வரும் வகையில் அவரது கட்சி அமைச்சரே வருபவர்களிடம் முறையற்று நடந்து கொள்வது சரிதானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதான் திராவிட மாடலா என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அமைச்சர் எம் ஆர் பன்னீர் செல்வத்தை இஸ்லாமிய பிரதிநிதிகள் பார்க்க வந்துள்ளனர்.

ஆனால் அமைச்சர் மட்டும் நாற்காலியில் பந்தோசாக உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு நாற்காலி வழங்காமல் நிற்க வைத்து பேசியுள்ளார். இவ்வாறு அந்த இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் அவர் செய்த புகைப்படமானது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அனைவரும் சமம் திராவிட மாடல் என்ற கொள்கையெல்லாம் வெளி ஆட்களுக்கு மட்டும்தான் போல உள்ளுக்குள் எதுவும் இல்லை என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Exit mobile version