எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்  நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!!

0
124
We will not be afraid of any intimidation and we will chase them out of the country!! Stalin's letter!!

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்  நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!!

திமுகவை தினமும் குறிவைத்து தாக்கும் விதமாக அமைச்சர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதில், முதலில் சிக்கியது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான்.

அடுத்து இந்த வரிசையில், சிக்கியது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. தற்போது இவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது.

இவ்வாறு திமுக வினருக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வரும்  நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று கூறி உள்ளார்.

மேலும், இது குறித்து ஸ்டாலின் கட்சியினருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், அறிவு திருக்கொவில்களால் சமுதாயத்தை மேம்படுத்த நாம் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஆனால் பாஜக கட்சியானது அமலாக்கத்துறை மூலமாக நம்மை குறிவைத்து தாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இது போன்ற ஏராளமான மிரட்டல்களையும், சோதனைகளையும் தாண்டி நிற்கின்ற கட்சிதான் நமது திமுக.

இவர்களின் இந்த பழிவாங்கும் செயல், அடுத்து வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் நம்முடைய வெற்றியை எளிதாக்கி வருகிறது. எனவே, மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சியையும், அதனுடன் கூட்டணியாக இருக்கும் கட்சியையும் மக்கள் வெளியே துரத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறி உள்ளார்.

மக்களை திசை திருப்பத்தான் எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறை சோதனையை கையில் எடுத்து இப்படியெல்லாம் செய்து வருகிறது என்று கூறி உள்ளார்.

எனவே, யாருடைய மிரட்டல்களுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம், இதற்கு பின்னால் இருக்கும் இருக்கும் உண்மையான எதிரியை உடனடியாக தேடி கண்டுப்பிடிப்போம்.

எனவே, திமுக கட்சியினர் அனைவரும் நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்குடன் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று அந்த கடித்தத்தில் எழுதி உள்ளார்.