Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவுக்கு எதிராக அதை செய்துதான் வெற்றி பெற்றோம்! இலங்கை பந்துவீச்சாளர் தீக்சனா ஓபன் டாக்!

we-won-by-doing-that-against-india-sri-lankan-bowler-deeksana-open-talk

we-won-by-doing-that-against-india-sri-lankan-bowler-deeksana-open-talk

இந்தியாவுக்கு எதிராக அதை செய்துதான் வெற்றி பெற்றோம்! இலங்கை பந்துவீச்சாளர் தீக்சனா ஓபன் டாக்!
இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றி பெற்றது குறித்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. புதிய பயிற்சியாளர் புதிய கேப்டன் என்று இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கைப்பற்றியது.
இதையடுத்து இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களின் வழிகாட்டுதலில் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் தலைமையில் இந்திய அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. நினைத்தபடி மூன்று ஒருநாள் போட்டிகளும் இந்திய அணிக்கு சிறப்பாக அமையவில்லை.
முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிய மற்ற இரண்டு போட்டிகளில் அதாவது இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே போல மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 248 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. மேலும் 27 வருடம் கழிந்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றி பெற்றது மாபெரும் வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா அவர்கள் ஒருநாள் தொடர் வெற்றி குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா அவர்கள் “இந்த வெற்றி மாபெரும் வரலாற்று சாதனையான வெற்றி. இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு நாங்கள் மிகப் பெரிய வியூகம் அமைத்து விளையாடித்தான் இந்த வெற்றியை பெற்றுள்ளோம்.
இந்தியாவை பெறுத்தவரை அங்கு இருக்கும் மைதானங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சுகளாகத் தான் இருக்கும். இந்திய மைதானங்களில் பவுண்டரிகள் தூரம் கூட குறைவாகத் தான் இருக்கும். ஆனால் இலங்கையில் கொழும்பு மைதானம் மிகப் பெரிய மைதானம் ஆகும். இந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும்.
இந்த மைதானத்தில் இந்திய அணி எப்படியும் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறும். இதை நாங்கள் கணித்து வியூகம் அமைத்தோம். அதேபோல நடந்தது. நாங்கள் ஒருநாள் தொடரை வென்றோம்” என்று கூறியுள்ளார்.
அடுத்த வருடம் அதாவது 2025ம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட சாம்பியன் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை கொடுத்துள்ளது.
Exit mobile version