ஜமைக்கா டெஸ்டில் த்ரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி!

0
113

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தவிர்த்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஆல்ம் 56 ரன்களும், அஷ்ரப் 44 ரன்களும், அதோடு கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களும், சேர்த்தார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக கேப்டன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும், வீழ்த்தினார்கள். இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும், வெளியேறினார்கள். பாகிஸ்தான் சார்பாக சாஹீன் ஆப்ரிடி 4 விக்கெட்டும் ,அப்பாஸ் 3 விக்கெட்டும், எடுத்தார்கள்.இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை சேர்த்தது. அபித் அலி 34 ரன்னிலும், அசார் அலி 23 ரன்னிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுபக்கம் கேப்டன் பாபர் அசாம் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 124 ரன்கள் முன்னிலை அடைந்தது. இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடந்தது பாபர் அசாம் 58 ரன்னில் வெளியேறினார். ஹசனலி 28 ரன்னில் அவுட்டானார். கடைசியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக சீலஸ் 5 விக்கெட்டுகளும், ரோச் 2 விக்கெட்டுகளும், எடுத்தார்கள் போல்டர் கெயில் மேயர் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும், எடுத்தார்கள். இதனைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மிகவும் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

பிராட் வெயிட் 2 கிரண் 4 பானெர் 5 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறி வந்தது. அடுத்து களம் புகுந்த ரோஸ்டன் சேஸ்,பினக்வு, ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 62 ரன்கள் சேர்த்த சூழலில் சேஸ் 22 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பிளாக் வுத் அரைசதம் கண்டு 55 ரன்னில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கெயில் மேயர் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் போல்டர் 16 ரன்னில் அவுட் ஆக அந்த அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

இருந்தாலும் இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரோச் நிதானமாக விளையாடினார். அவர் பொறுப்புடன் விளையாடி 12 என சிறு சிறு துண்டுகளாக சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து வெற்றியடைந்தது. இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 10 என முன்னிலை வகிக்கிறது ஆட்ட நாயகன் விருது சீலஸுக்கு வழங்கப்பட்டது.