Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோலிக்கு சவால் விடும் மேற்கிந்திய தீவுகள் அணி!

நேற்று முன்தினம் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார் அப்போது அந்தப் பந்து எட்ஜாகி பவுண்டரிக்கு சென்றது, அதனை தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தில் பவுண்டரியானது.

அப்போது விராட் கோலி மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இதனை தொடர்ந்து அல்ஜாரியிடம் சென்ற அந்த அணியின் கேப்டன் பவுன்சர் பந்துகளை வீசுமாறு தலையில் கைவைத்து சிக்னல் செய்தார். அதன் பிறகு அல்ஜாரி ஜோசப் அடுத்த பந்திலேயே தரமான பவுன்சை வழங்கினார்.

இதன்காரணமாக, கோலி சற்று திணறிப் போனார். ஆனாலும் கீழே குனிந்து கொண்டு அந்த பந்தை தவிர்த்து விட்டார். அடுத்ததாக கோலி அடுத்த பவுன்சராக தான் வீசுவார் என்பதை புரிந்து கொண்டு கால்களை அதற்கேற்றவாறு நகர்த்திக் கொண்டு நின்றார்.

ஆனாலும் அல்ஜாரி அடுத்த பந்தை பவுன்சராக வீசினார், அந்த பந்தை எதிர்கொண்ட கோலி பைன் லெக் ஷாட் அடித்த சூழ்நிலையில், பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேமர் ரோச் அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார்.

ஆகவே இந்த திசையில் தான் கோலி பந்தை தூக்கி அடிப்பார் என்பதை தெரிந்து கொண்டது போலவே 2 பீல்டார்கள்ப் பவுண்டரி லைனில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். இது அந்த அணியின் கேப்டனின் திட்டமென்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் 2 பவுண்டரிகள் சென்றவுடன் பவுன்சர் போட தெரிவித்துவிட்டு பில்டர்களை ஒவ்வொரு இடத்திலும் அமைத்தார். ஆகவே இனிவரும் போட்டிகளிலும் இதே திட்டத்தை தான் பொல்லார்ட் செயல்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே கோலிக்கு சவால் விடும் திட்டத்தை அடுத்தடுத்து வரும் போட்டிகளில் விராட் கோலி நிச்சயமாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி மற்றும் அல்ஜாரி ஜோசப் யுத்தம் அதிகமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version