என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றப்போகிறார்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பாரத் என்று மாற்றுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனால், நெட்டின்கள் பயங்கரமாக ஷேவாக்கை தாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, இது குறித்து சேவாக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இது என் தேசம். என் தேசத்தை பாரத் என்று அழைக்க நான் விரும்புகிறேன். ஆனால், இதை அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. எந்த அரசியல்வாதிக்கும் நான் ரசிகன் கிடையாது என்று காட்டமாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்டனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து தற்போது இணையதளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
அதாவது, கடந்த 75வது சுதந்திர தினத்தையொட்டி தோனி தன்னுடைய இன்ஸ்டாவின் டிபியை மாற்றினார். அதில், பழைய புகைப்படத்தை வைத்தார். இதைப் பார்த்த நெட்டின்கள் தோனி பாரத் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று வதந்தி பரவி வருகிறது.
இதற்கு அவரது ரசிகர்கள் தோனி அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் தேவையற்றதை பேசி சர்ச்சையில் சிக்காதவர். விவசாயிகள் போராட்டத்தின் போதுகூட அவர் எதுவும் கருத்து பதிவிடவில்லை. தன்னை குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களை மட்டுமே அவர் பதிவிட்டு வருகிறார். அதனால், பாரத் என்று பெயர் மற்றத்தில் ஒருபோதும் அவர் ஆதரவு கொடுக்க மாட்டார். இதெல்லாம் வதந்திதான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.