பும்ராவிற்கு என்ன ஆச்சு…? அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கா? பதற்றத்தில் ரசிகர்கள்

0
98
#image_title

பும்ராவிற்கு என்ன ஆச்சு…? அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கா? பதற்றத்தில் ரசிகர்கள்

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இந்திய அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, ரோகித் சர்மா மட்டும் 53 ரன்களை குவித்தார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 213 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களத்தில் இறங்கியது. அப்போது முதல் ஓவரில் பும்ரா பந்து வீசினார். 4-வது பந்து வீசியபோது அவர் ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காலை நன்றாக வளைத்துக் கொண்டார். இதனால், அவருக்கு வலி ஏற்பட்டு துடிதுடித்தார். இருந்தாலும் வலியை பொறுத்துக் கொண்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் சற்றே பதறிவிட்டனர். இதன் பின், ஐந்து ஓவர்கள் வீசிய பும்ரா அதில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தினார். 5 ஓவர்கள் வீசி முடித்து விட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

பின்னர், காலை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து விட்டு பின்னர், மைதானத்திற்கு திரும்பினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பும்ராவிற்கு என்ன ஆச்சு? அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது, இந்திய அணி வட்டாரத்திலிருந்து இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவிற்கு பெரிய அளவில் காயம் ஏதுமில்லை என்றும், ஆனால், அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.