இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் மட்டும் பேட்டிங் நன்றாக செய்தது. அதன் பின் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் பேட்டிங்கில் சொதப்பி வந்த நிலையில் இன்று தொடங்கி ஐந்தாவது போட்டியிலும் அதை இந்திய அணி தொடர்ந்து உள்ளது எந்த வீரரும் அரை சதம் கூட அடிக்காமல் அனைத்து வீரர்களும் குறைவான இடங்களில் ஆட்டம் இழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் விளையாடி முடித்த நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று களம் இறங்கியது.
ஆனால் அனைத்து வீரர்களும் குறைவான ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். முதலில் டாஸ் என்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்களில் கே எல் ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய கில் 20 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும், ரிஷப் பண்ட் 40 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 26 ரன்களிலும், நிதீஷ் குமார் ரெட்டி டக் அவுட் ஆனார். அடுத்தடுத்து கிளம்புறீங்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே சேர்த்தன.