Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உறுதியானது பும்ராவின் கேப்டன்ஷிப்.. காயத்தால் வெளியேறும் ரோகித் சர்மா!! நடந்தது என்ன??

What is certain is Bumrah's captaincy

What is certain is Bumrah's captaincy

Cricket : ஆஸ்திரேலியா உடனான நான்காவது போட்டியின் வலை பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணி உடன் நான்காவது போட்டியில் விளையாட உள்ளது இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மூன்று போட்டியில் விளையாடியுள்ளது. அதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகள் என்று மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு செல்ல இந்தத் தொடரில் நான்கு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. எனினும் இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது மற்றும் மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால் அடுத்த நடைபெற உள்ள இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இவ்வாறு இருக்கும் நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவின் காலில் வலை பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ரசிகர்கள் அடுத்த போட்டியில் பும்ரா தான் கேப்டனாக அணியில் விளையாடுவார். ரோகித் சர்மா அடுத்த போட்டியில் களமிறங்குவது சந்தேகம் தான் என்று பரவலாக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version