Cricket : இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு குறித்து இந்தியனின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்கள் மூத்த வீரர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் இவர் இந்தியா மட்டும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். இதனால் பல கிரிக்கெட் வல்லுனர்களும் அவருக்கு போட்டிகளில் சரியான வாய்ப்புகள் அளிக்கப்படாததால் மன வேதனையில் அவர் ஓய்வு அறிவித்ததாக பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய பவுலர்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் அவருக்கு இந்திய மண்ணில் மட்டும் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
மற்ற சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அஸ்வினை அணியில் எடுக்காதது ஏன்? சொந்த மண்ணில் அஸ்வின் இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பது தெரியும் அதனால் சொந்த மண்ணில் அவர் எப்போதும் அணியில் இருப்பார். ஆனால் வெளி நாட்டு மண்ணில் அவருக்கு வாய்ப்புகள் அதிகப்படியாக மறுக்கப்படுகின்றன. கேட்டால் அணியின் பேலன்ஸ் மிஸ் ஆவதாக கூறுகிறார்கள். மேலும் அவருக்கு கேப்டன் பதவி இதுவரை கொடுத்ததில்லை. துணை கேப்டனாக கூட இருந்தது இல்லை. அவர் இந்தியனின் கேப்டனாக இருந்தால் நிச்சயம் ஒரு கேப்டனாக சிறந்த பெயரை வாங்கி இருப்பார். என்று கடுமையாக பேசினார் சுனில் கவாஸ்கர்.