ஒருவர் அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்று பரிசினை வாங்கும் பொழுது அவர்கள் கண்ட துன்பங்களையும், அவமானங்களையும் பற்றி மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் அதிலிருந்து எவ்வாறு வெளிவந்தனர் என்பதை மட்டும் யாரும் கூற மாட்டார்கள். ஆனால் ஒரு இரண்டு விஷயங்களை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையையே நீங்கள் மாற்றி விடலாம்.
1.BELIEVE IN YOUR SELF:
எனது வாழ்க்கையில் எனக்கு எதுவுமே நடக்காது, எனக்கு தோல்வி மட்டும்தான் கிடைக்கும் என்று கூறுபவர்கள் முதலில் அவர்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது உங்களது எண்ணத்தில், உங்களுக்கு வேண்டியது குறித்த தெளிவும், விருப்பமும் இருந்தால் அது கண்டிப்பாக உங்களிடம் வந்து சேரும். நீங்கள் உங்களை முழுமையாக நம்பாத வரையிலும், உங்களை சுற்றி உள்ள யாரும் உங்களை நம்ப மாட்டார்கள்.
நமது வாழ்க்கையில் நாம் யார்? என்பது குறித்து தெரியாமல் மற்றவர்களிடம் நம்மை குறித்து கேட்டுக் கொள்வோம். இதனால் மற்றவர்கள் கூறுவதை நாம் உண்மை என்று நம்பி கொள்வோம். நமது ஆழ்மனதில் ஒரு விதமான சக்தி உள்ளது, அதனிடம் நாம் என்ன கூறுகிறோமோ அது கண்டிப்பாக நடக்கும்.
நாம் ஒரு செயலில் தோல்வி அடைந்தால் நமது ஆழ்மனதிடம் கேள்வி கேட்க வேண்டும். அதாவது அந்த செயலை செய்வதற்கு முன்பாக நாம் அதில் வெற்றி அடைவோம் என்று நம் மீது நம்பிக்கை வைத்திருந்தோமா? என்று, நாம் நம் மீது முழு நம்பிக்கை வைக்காத வரை நம்மால் எதிலும் வெற்றியை காண முடியாது.
நாம் ஒரு வேளை வெற்றி அடைந்து விட்டால், “நான் எவ்வாறு வெற்றியடைந்தேன், அதற்கு வாய்ப்பே இல்லையே” என்று நமது நம்பிக்கையை நாமே குறைத்து எடை போட்டு விடுகிறோம். நம் மீது நாம் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும் அப்பொழுதுதான் அனைத்து செயல்களிலும் வெற்றியை காண முடியும்.
2.LEARN FROM FAILURES :
நீங்கள் என்னதான் உங்கள் மனதிடம் வெற்றியடைந்து விடுவோம் என்று கூறினாலும், தோல்வியை சந்திக்காமல் வெற்றி அடைய முடியாது. குறைந்தது ஒரு முறையாவது தோல்வியை அடைந்து தான் ஆக வேண்டும். ஆனால் நமது ஆழ் மனதிற்கு தெரியும் வெற்றி தான் நமது இலக்கு என்று.
நாம் நமது செல்போனில் கேம் விளையாடும் பொழுது, முதல் லெவல் ஆனது எளிமையாக இருக்கும். அதற்குப் பிறகு கடினமாகி கொண்டே போகும். அதிலிருந்து நாம் எவ்வாறு தோல்வியை கண்டு, அனுபவங்களை பெற்று வெற்றி அடைகிறோமோ, அதனைப் போன்று தான் வாழ்க்கையும். பல தோல்விகளை காணும் பொழுது தான், பலவிதமான அனுபவங்கள் நம்மிடம் உருவாகிறது. அந்த அனுபவமே நமது வாழ்க்கையில் வெற்றி ஏற்பட வழி வகுக்கிறது.
உங்களது வாழ்க்கையில் தோல்விக்காக காத்திருங்கள். ஏனென்றால் தோல்விதான் உங்களை செதுக்க கூடிய கருவி. தோல்வியை காணும் பொழுது தோல்வி ஏற்பட்டதற்கான காரணம், நாம் அதில் எதை மாற்ற வேண்டும்? எதை செய்ய வேண்டும்? எவ்வாறு செய்ய வேண்டும்? என்பதை கற்றுக் கொண்டு பல அனுபவங்களை பெற்ற பின்னரே நமது வாழ்க்கையில் வெற்றியை காண முடியும் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.