போர்ஷே எங்கே, யுவராஜ் செய்த thug life.. உருவான ஐபிஎல் தொடர்..

0
91
Where is the Porsche, Yuvraj's thug life.. IPL series formed..

உலக அளவில் “கிரிக்கெட்” தனது அசுர வளர்ச்சியால், உலக விளையாட்டில் தனி இடத்தை பிடித்திருக்கிறது, கிரிக்கெட்டின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் “ஐபிஎல்” தொடர்ந்தான். இந்தியாவில் உருவான “டி 20” தொடர் தான் “உலகில் ஒரு புரட்சியை” உருவாக்கியது. அன்றைய “பிசிசிஐ” உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக இருந்த “லலித் மோடி” கிரிக்கெட் “டி 20” தொடரை உருவாக்குக்கத்தில் விடாப்பிடியாக இருந்து தொடரை உருவாக்கினார்.

இந்த முயற்சி தற்போது “டி 20” க்கு என்று தனிப்பெரும் ரசிகர்களை கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பற்றி சில தினங்களுக்கு முன் பேசிய “லலித் மோடி” அவர்கள், “யுவராஜ் சிங்” தான் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முக்கிய காரணம் என பேட்டி கொடுத்துள்ளார்.

இதை பற்றி “லலித் மோடி” கூறுகையில் இந்திய அணி “டி 20” உலக கோப்பையில் “2007” ஆம் ஆண்டு கலந்து கொண்டு விளையாடியது. அந்த போட்டிக்கு நானும் சென்றிருந்தேன்.அப்போது நான் எந்த ஒரு வீரராவது “6 பந்துகளில், 6 விக்கெட் வீழ்த்தினாலோ” அல்லது “6 பந்துகளில், 6 சிக்ஸ்” அடித்தாலோ அவருக்கு “போர்ஷா காரை” பரிசளிப்பதாக தெரிவித்திருந்தேன். இதெல்லாம் சாத்தியமான விஷயமா என்று பலரும் நினைத்தார்கள். அப்போது எனக்கு “6 பந்துகளில், 6 விக்கெட் எடுப்பது”, “6 பந்துகளில், 6 சிக்ஸ்” அடிப்பது என்பது “முடியாத காரியம்” என்றும், அப்படி நடந்தால் அது “மிக பெரிய சாதனையாக” மாறும் என்று தோன்றியது.

ஆனால் “இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங்” அந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார். ஒரு ஓவரில் போடப்பட்ட அனைத்து பந்துகளையும் “சிக்ஸருக்கு விளாசி” தள்ளினார். இந்த நிகழ்வு நடந்த அன்று அனைத்து பத்திரிகை, செய்தி சேனல்களும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் தொடரில் “யுவராஜ் செய்த சாதனை” பற்றி தான் பேசப்பட்டது. அதிலிருந்து “டி 20 கிரிக்கெட் தொடர்” முற்றிலும் மாறிவிட்டது.

போட்டி முடிந்தவுடன் என்னிடம் நேராக வந்த யுவராஜ், “போர்ஷே எங்கே” என கேட்டார். அந்த நொடியில் தான் “ஐபிஎல் தொடர்” போட்டிக்கான எண்ணம் எனக்குள் உருவானது என்று தனது பேட்டியில் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை உருவாக்கிய “லலித் மோடி” அவர்களே, “ஐபிஎல் உருவாவதற்கு யுவராஜ்” தான் காரணம் என்று சொல்ல யுவராஜ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திகைத்து போய் உள்ளனர்.