Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக்கோப்பை தொடருக்கான முதல் போட்டி எந்தெந்த அணிக்கு? எந்த நேரம்? எதில் இலவசமாக பார்க்கலாம்?

CRICKET TEAM

CRICKET TEAM

உலகக்கோப்பை தொடருக்கான முதல் போட்டி எந்தெந்த அணிக்கு? எந்த நேரம்? எதில் இலவசமாக பார்க்கலாம்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பல்வேறு அணிகள் அதற்காக தயாராகிக் கொண்டு வருகின்றனர்.இந்தியா பாகிஸ்தான் உட்பட பத்து அணிகள் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கிறது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாக திகழ்கிறது.

நாளை மோத உள்ள அணிகள்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

போட்டியின் நேரம்:
நாளை நடைபெற உள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான போட்டி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது.மேலும் இப் போட்டிக்கான டாஸ் போடும் நிகழ்வானது 1:30 மணிக்கு துவங்கப்படும்.

இலவசமாக பார்ப்பது எப்படி?

பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட போட்டிகள் மற்றும் நிகழ்வுகளை அனைத்தையும் ஸ்டார் நிறுவனங்கள் தான் வெளியிடும். இந்த உலகக்கோப்பை தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான அனைத்து மொழி சேனல்களிலும் பார்த்து மகிழலாம்.மேலும் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆடும் முதல் போட்டியை இலவசமாக பார்த்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்தி வரும் மக்களுக்கு அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கும் வசதிகளை செய்துள்ளனர்.

Exit mobile version