இலங்கையில் நடக்கும் தொடரில் யாருக்கு வாய்ப்பு? இந்திய அணியின் சீனியர் பிளேயர்ஸ்க்கு ஓய்வா?

0
306
Who has a chance in the series in Sri Lanka? Rest for senior players of Indian team?

இலங்கையில் நடக்கும் தொடரில் யாருக்கு வாய்ப்பு? இந்திய அணியின் சீனியர் பிளேயர்ஸ்க்கு ஓய்வா?

இந்திய அணி டி-20 உலககோப்பை வென்ற பிறகு அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ஜடேஜா ஆகியோர் டி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில். தற்போது இந்திய அணி ஜிம்பாபாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கிறது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கி உள்ளனர்.

இந்தத்தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இலங்கையில் நடைபெறும் தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்கிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் சீனியர் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது ஒரு புதிய செய்தி கிடைத்துள்ளது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித், கோலி மற்றும் பும்ராஹ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இந்திய அணியின் செயலாளர் ஜெய் ஷாஹ் கூறுகையில் வரும் மாதங்களில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது இதில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன் பின்னர் தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் செய்து டி-20 போட்டியில் விளையாடுகிறது. அதற்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அங்கே டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதனால்தான் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடர் நடைபெறுவதால் அதை கருத்தில் கொண்டு கூட ஓய்வு கொடுத்திருக்கலாமென்று தெரிகிறது. இதன் மூலம் இந்திய வீரர்கள் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாமென்று எதிர் பார்க்கப்படுகிறது.

தற்போது இந்திய பயிற்சியாளர் டிராவிட் ஓய்வை அறிவித்த நிலையில் புதிய பயிற்ச்சியாளர் யாரென்று இன்னும் தேர்வு செய்யவில்லை. இலங்கை சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்குள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் புதிய கேப்டனை தேர்வு செய்து இளம் வீரர்களுடன் களம் இறங்குவார்களென்று எதிர் பார்க்கப்படுகிறது.