cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா சரியான பேட்டிங் வரிசை அமைக்கப்படவில்லை மீண்டும் தொடங்கிய ஓப்பனிங் பிரச்சனை.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்தது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ள வில்லை அதனால் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கினார். அவர் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல்,விராட் கோலி அவர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார். ஆனால் தொடக்க வீரராக களமிறங்காமல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் அவர் ஒற்றை இலக்க ரன்களில் வழக்கம் போல் ஆட்டமிழந்தார். இந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் மீண்டும் யார் தொடக்க வீரர் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர்கள் மீண்டும் ரோஹித் சர்மா தொடக்கத்தில் களமிறங்க வேண்டும் என்ற கருத்து ஒரு கூட்டமும், கே எல் ராகுல் தான் தொடக்க ஆட்டத்தில் தொடருவார் என்று ஒரு கூட்டமும் கூறிவருகின்றனர். இவ்வாறு கூறி வரும் நிலையில் அவர் எந்த இடத்தில் இறங்க வேண்டும் உங்கள் கருத்து என்ன?