எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் டி20 லீக்கில் மட்டுமே விளயாடுவார். இன்னும் இரண்டு வருடங்கள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. அதன்பின் வேண்டுமென்றால் கூடுதல் ஒருவருடம் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் அவருக்குப்பின் அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த கேப்டனை தயார்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதுகுறித்துதான் எம்எஸ் டோனி சிந்தித்து வருகிறார் என்று சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பு யாருக்கு?
