மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?? ஆறாம் தேதி தெரிந்து விடும்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உதவித்தொகை என்னும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
அதன்படி அனைத்து மகளிருக்கும் செப்டம்பர் பதினைந்தாம் தேதி முதல் இந்த உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த ஜூலை மாதம் இருபதாம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
மேலும், இதற்கான முதல் கட்ட விண்ணப்பங்களை பெரும் பணியானது ஜூலை 24 யில் துவங்கப்பட்டு நாளை வரை நடைபெற இருக்கிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவிதொகை பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது. எனவே, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.
எனவே, தகுதியான குடும்ப தலைவிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணியானது வருகின்ற ஆறாம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் சரி பார்க்கப்பட்டு அதன் பிறகு தகுதி உடைய குடும்ப தலைவிகளை தேர்வு செய்வார்கள்.
அதாவது, மென்பொருள் மூலம் மகளிரின் ஆதார் எண்ணை வைத்து அவர்களின் விவரங்களை அறிந்து யாரெல்லாம் இந்த கலைஞர் உதவித்தொகைக்கு தகுதி ஆனவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, இந்த உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதற்கான விவரங்கள் ஆறாம் தேதி முதல் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதை பெறுவதற்கு தேவையான தகுதிகள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.