இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

0
118

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

இந்திய அணி சார்பாக நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள அடுத்த வாரத்திலேயே ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் செய்துள்ளது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றால்தான் மாபெரும் தோல்வி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழப்பது 30 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறையாகும். கோலியின் தலைமையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணிக்கு இது மாபெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதையடுத்து பிருத்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளனர். ஆனால் ஹனுமா விஹாரி சதம் அடித்துள்ளார். ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கியுள்ளார் என்பதால் அவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.