Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வலைதளத்தில் கேள்வி எழுப்பிய அஷ்வினின் மனைவி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மனைவி மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு யார் செய்த வேலை இது என்று அவருடைய மனைவி பிரீத்தி அஸ்வின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்த அஸ்வின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ரசிகர்களிடம் வலைதளப் பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். மாபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இது யார் செய்த வேலை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் நடிகர் இளையதளபதி விஜய் வாயில் விரல் வைத்து சைகை காட்டுவது போல கொடுத்திருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த போஸ்டரில் விஜயின் புகைப்படத்திற்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் புகைப்படத்தை மாபிங் செய்து வைத்திருக்கிறார்கள் இந்த புகைப்படம் தற்சமயம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version