டி20 உலக கோப்பைக்காக்கான இந்திய அணியில் ஆலோசகராக தோனியை நியமித்தது விராட் கோலியை மட்டம் தட்டும் செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வீரர்களே இடம்பெற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே யாரும் கணிக்காத வீரர் ஆவார்.
இந்த தொடரில் அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் தோனி நியமிக்கப்பட்டுள்ளது தோனியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் மற்ற கிரிக்கெட் விமர்சகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தோனியை விமர்சகர்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
1. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுப்பெற்றிருந்தாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிவருகிறார். ஒரு வீரர் ஒரு அணியில் விளையாடி வரும்போதே சர்வதேச அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டது ஏற்புடையதல்ல என தெரிவித்துவருகின்றனர்.
2. இதற்கு முன்னர் எந்த ஒரு அணிக்கும் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பதவி வகிக்காத அவர் எதன் அடிப்படையில் தேசிய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற அடிப்படை கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
3. பல போட்டிகளில் வெற்றிபெற்று பல தொடர்களில் கோப்பையை வென்று குறிப்பாக ஆஸ்திரேலியாவையே அதன் சொந்த மண்ணில் இருமுறை வீழ்த்தி வரலாறு படைத்தும் விராட் கோலியை இயக்க தோனியை ஆலோசகராக நியமித்துள்ளது ஏற்புடையதல்ல என்று தான் சொல்ல தோன்றுகிறது.
4. சீனியர் வீரர்கள் பலர் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் இருந்தபோதும் அவர்களிடத்தில் கலந்தாலோசிகாமல் பிசிசிஐ தன்னிச்சையாகவும் மறைமுகமாகவும் எடுத்துள்ள இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
5. அணிக்கு ஆலோசகர் கேப்டனாக இருக்கும் கோலி பரிந்துரையின் பேரிலும் ரவிசாஸ்திரி பரிந்துரையின் பேரிலும் நடைபெற்றதாக சொல்லும் பிசிசிஐ அதற்கான தேர்வை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்வது ஏன்?
6. ஒரு அணியில் ஆடி வரும் வீரர் மற்றோரு அணிக்கு ஆலோசகராக்கப்படும்போது அவர் விளையாடிவரும் அணியினருக்கு முன்னுரிமை வழங்கமாட்டாரா?
7. ஒருவேளை இந்த அணி உலக கோப்பையை வென்றால் அதற்கு காரணமானவர் யார்? கேப்டனா அல்லது பயிற்சியாளாரா அல்லது ஆலோசகரா..
8. ஒருவேளை அணி தோல்வியடையும்போது அதற்கு யார் பொறுப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்பாரா?
9. 2019 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து சர்வதேச உலக போட்டிகளிலும் தோனியின் பங்களிப்பு என்ன? அணியில் உள்ளபோதே ஆலோசனை கொடுத்து அணியை சிறப்பாக வழி நடத்திருக்கலாமே ?
10. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்து இந்தியா அணி தவித்துக்கொண்டிருக்கும்போதே இரவோடு இரவாக கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி இந்த சிறிய கால இடைவெளிக்குள் பக்குவம் அடைந்து ஆலோசகராக உயர்ந்துள்ளது ஆச்சர்யமே?