சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது இதற்காகதானா? வெளியான தகவல்

0
153

சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது இதற்காகதானா? வெளியான தகவல்

சி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது குறித்து காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

 தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் டிரேடிங் விண்டோ மூலமாக அடுத்த சீசனில் தன்னை எடுக்க வேறு அணிக்கு மாற அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். சிஎஸ்கே அணி நிர்வாகம் அதற்கு சம்மதிக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் அடுத்த சீசனில் அவரை மும்பை இந்தியன்ஸ்  அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஜடேஜா தொடர்ந்து சொதப்பியதால் அவருக்கு இந்திய அணியிலும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் தோனியும், அணி நிர்வாகமும் இணைந்து இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.