WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 4 வது போட்டி வரும் 6 ஆம் தேதியும், கடைசி டி20 போட்டியானது வரும் 7 ஆம் தேதியும் நடக்கவுள்ளது. ஃப்ளோரிடாவில் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ள 4 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த 4 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.
அந்த வகையில் 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 3 வது போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். தற்போது கேப்டன் ரோஹித் சர்மா அந்த காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை அடைந்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனால் இந்திய அணி காம்பினேஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும். இந்த 4 வது டி20 போட்டியிலும் தீபக் ஹூடா ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.