Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 உலக கோப்பையில் இந்த நாடு பங்கேற்குமா? கிரிக்கெட் வாரியம் அளித்த பரபரப்பு தகவல்!

சமீபத்தில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தாலிபான் தீவிரவாத அமைப்பு. இது உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. தாலிபான் ஆட்சியில் பல விஷயங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது விளக்கம் அளித்ததோடு அந்த நாட்டில் இருக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, உள்ளிட்டோர் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மிக விரைவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக உரையாற்றிய அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஹமீத் அன்சாரி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரில் டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயமாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாங்கள் பிசிசிஐ மற்றும் ஐசிசியுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகின்றோம். அவர்களும் ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதன் காரணமாக, கிரிக்கெட் விளையாடுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version