மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட பட்டம் வெல்லாத ஒரே அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான். ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சீரற்ற ஆட்டமும், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மிரள்வதும் தொடர்கதையாகிறது. இத்தனைக்கும் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். புதிய லோகோ, சில புதிய வீரர்களின் பிரவேசம், பயிற்சி குழுவில் மாற்றம் என்று வழக்கம் போல் அணி செதுக்கப்பட்டு களம் காணுகிறது. கேரி கிர்ஸ்டன் விடுவிக்கப்பட்டு புதிய தலைமை பயிற்சியாளராக சைமன் கேடிச் பொறுப்பேற்றுள்ளார்.
சக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?
