ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏன் என்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. மேலும் 1972 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பரம எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு போட்டிகளும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
இதனால் நாளைய போட்டியில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்ய போகும் என்ற ஆவல் ரசிகர் மனதில் உருவாக்கி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 151 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா அணி 63 வெற்றியும் இங்கிலாந்து அணி 83 வெற்றியும் பெற்றுள்ளது.
இரண்டு போட்டி டை ஆனது. 3 போட்டிகளில் முடிவு இல்லை. மான்செஸ்டர் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 26 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 27 முறையும் வெற்றி பெற்றுள்ளது