இந்திய அணி இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 4 வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். சொல்லப்போனால் இந்த போட்டி மட்டுமல்லாமல் அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. நியூசிலாந்து தொடரின் தோல்விக்கு பின் புள்ளி பட்டியலில் இந்திய அணி அடி வாங்கியது. இதில் இருந்து இறுதி போட்டிக்கு முன்னேற இந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 கில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்த போதும் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று ஒரு போட்டி சமன் செய்தது.
மேலும் தற்போது 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் களமிறங்கி அவுட் ஆகினர். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஜெயஷ்வால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கின் காரணமாக 358 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி நாளை ஆட்டமிழந்து இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா விளையாட தொடங்கினாலும் அவர்களை 100 முதல் 250 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும். அடுத்து களமிறங்கும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ரோஹித் மற்றும் விராட்,கே எல் ராகுல் நிதானமாக ஆடி வெற்றி பெற வேண்டும்.